காஞ்சிபுரம் குமரகோட்டத்தில் உள்ள சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் மாசிமாத முதல் செவ்வாய்கிழமையொட்டி வெள்ளி திருத்தேர் பவனி வெகு விமரிசையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட வெள்ளி தேரில் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளியதையடுத்து ஏராளமான பக்தர்கள் அரோகரா என கோஷங்கள் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.