தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா பணிகள் குறித்து, அதிகாரிகளுடன் நேரில் சென்று கனிமொழி எம்பி ஆய்வு மேற்கொண்டார். கந்த சஷ்டி திருவிழா வரும் 2-ம் தேதி தொடங்கி 10 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளது. இந்த நிலையில் விழாவுக்கான ஏற்பாடுகளை கனிமொழி எம்பி ஆய்வு செய்தார். அப்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உடன் இருந்தார்.