மயிலாடுதுறை மாவட்டம், புங்கனூர் ஊராட்சியில் பாழடைந்த நிலையில் உள்ள துணை சுகாதார மைய கட்டடத்தை இடித்து அகற்றி விட்டு புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த பத்தாண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த இந்த கட்டடம் சேதமடைந்ததன் காரணமாக பராமரிப்பின்றி கைவிடப்பட்டது. இதன் காரணமாக மக்கள் மருத்துவ சேவைகளை பெற அருகிலிருக்கும் பிறபகுதிகளுக்கு செல்லும் நிலை நீடிக்கிறது. இதன் காரணமாக, புங்கனூரிலேயே துணை சுகாதார மையத்தை அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.