தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த குன்றக்குடி கோயில் யானை சுப்புலட்சுமியை ஏராளமானோர் கண்ணீர் மல்க ஊர்வலமாக எடுத்து சென்று நல்லடக்கம் செய்தனர்.மலர்களால் அலங்கரிக்கப்பட்ட லாரியில், இறந்த யானையின் உடலை கோயில் நிர்வாகத்தினர் ஏற்றினர்.இதனை தொடர்ந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்ணீர் மல்க, வாணவேடிக்கை மற்றும் மேள தாளங்கள் முழங்க யானையின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு பஞ்சாயத்திற்கு சொந்தமான இடத்தில் , நல்லடக்கம் செய்யப்பட்டது.