சினிமா சூட்டிங்கிற்கு அழைத்து சென்று ஊதியம் வழங்கவில்லை என சினிமா ஏஜென்ட் மீது துணை ஏஜென்டுகள் மதுரை மாவட்ட சார்பு நீதிபதியிடம் புகார் மனு அளித்துள்ளனர். மதுரையை சேர்ந்த துணை நடிகர்களை சினிமா ஏஜென்ட் மைக்கேல் என்பவர் நடிகர்கள் ஆர்யா, துல்கர் சல்மான், இயக்குநர் பொன்ராம் ஆகியோரின் திரைப்படங்களுக்கான சூட்டிங்கிற்காக பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று அட்வான்ஸ் மட்டும் கொடுத்து விட்டு முறையான ஊதியம் தரவில்லை என கூறப்படுகிறது.இதனால் கடன் வாங்கி துணை நடிகர்களுக்கு ஊதியம் கொடுத்த துணை ஏஜென்டுகளான ராணி, பாண்டி மற்றும் பாண்டிசெல்வி ஆகியோர் ஊதியம் கொடுக்காமல் ஏமாற்றி வரும் மைக்கேல் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்துள்ளனர்.