விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உரம் தயாரிக்கும் தொழிற்சாலையில் சுற்றுச்சூழல் அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். மாமந்தூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் வேல்முருகன் பெர்டிலைசர் தனியார் உரம் தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து நச்சுத்தன்மை கலந்த புகை வெளியேறுவதால் பத்துக்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டதாக கூறி பொது மக்கள் தீக்குளிக்க முயன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் மக்கள் பாதிக்கும் விதமாக செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவித்தனர்.