10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பரிசுகளை வழங்கி பாராட்டினார். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இரண்டாம் கட்டமாக 84 தொகுதிகளை சேர்ந்த 504 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.