புதுக்கோட்டையில் தனியார் கல்லூரி பேருந்தை அதே கல்லூரியின் மாணவர்கள் கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆலங்குடியில் சேசு கல்வி குழுமத்தின் கீழ் பல்வேறு கல்வி நிறுவனங்கள் இயங்கி வரும் நிலையில், அங்கு ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிக்கும் 4 மாணவர்கள், சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தை கடத்தி சென்றனர்.