கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே அரசு பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த பள்ளி மாணவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். நடத்துனர் பலமுறை எச்சரித்தும் பேருந்துக்குள் வராமல் படிக்கட்டில் நின்று மாணவர்கள் பயணித்ததால், வண்டி நேராக காவல் நிலையம் சென்றது.