கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே மாணவர்கள் அரசுப் பேருந்தின் படிக்கட்டு மற்றும் ஜன்னல் கம்பிகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. அத்திப்பாக்கம் கிராமத்தில் இருந்து நத்தாமூர், கிளியூர், குன்னத்தூர், களமருதூர் வழியாக உளுந்தூர்பேட்டை செல்லும் பேருந்தில், 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் இடப் பற்றாக்குறை காரணமாக உயிருக்கு ஆபத்தான முறையில் பயணம் செய்யும் நிலை உள்ளதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.