ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியில் தனியார் பேருந்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடியும், மேற்கூரையில் ஏறி அமர்ந்தும் பயணித்த வீடியோ வெளியாகியுள்ளது. ஆபத்தான முறையில் பயணிப்பது தெரிந்தும் தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மாணவர்களை கண்டுகொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.