விருதுநகரில் தனியார் பேருந்தின் மேற்கூரையில் அமர்ந்து மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட வீடியோ வெளியாகி பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சாத்தூரில் இருந்து விருதுநகர் வரை சென்ற தனியார் பேருந்தில் பயணித்த ஏராளமான மாணவர்கள் படிக்கட்டு, ஜன்னலில் தொங்கியவாறு ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு ஏதுவாக அதிக எண்ணிக்கையில் பேருந்துகளை இயக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.