கன்னியாகுமரிக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வந்துள்ள மாணாக்கர்களை வரவேற்ற மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, அவர்களுடன் கலந்துரையாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அயலக தமிழ் மாணவர்கள் நமது கலாச்சாரத்தை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும் என வேர்களை தேடி திட்டத்தின் கீழ் அவர்கள் அனைவரும் குமரிப்பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.