ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள ஆதிதிராவிடர் மாணவியர் நல விடுதிக்குள் புகுந்த மர்மநபர், மாணவிகளின் உள்ளாடைகளை கிழித்துவிட்டு செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விடுதி காப்பாளர் புகார் அளிக்க மறுப்பதால், அங்குள்ள மாணவிகள் ஒருவித அச்சத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது.