ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்ததை தட்டிக்கேட்ட அரசு பேருந்து நடத்துநர் மீது மாணவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோளிங்கர் செல்லும் அரசு பேருந்தில் ஏறிய மாணவர்கள் படியில் தொங்கியபடி சென்றனர். அதனை பேருந்து நடத்துநர் சிட்டிபாபு தட்டி கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள், பேருந்தை நிறுத்தி கற்களை வீசி கண்ணாடியை உடைத்தனர். மேலும் நடத்துநர் சிட்டிபாபுவிடம் வாக்குவாதம் செய்து அவரை கும்பலாக தாக்கினர்.இதையும் படியுங்கள் : கிணற்றில் தவறி விழுந்த ஒரு வயது பெண் குழந்தை... குழந்தையை காப்பாற்ற கிணற்றில் குதித்த தாய்