தருமபுரி மாவட்டம் கடத்தூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட 10 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடக்கப்பள்ளியில் படித்து வந்த 80க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு காலை உணவாக சாம்பாருடன் அரிசி உப்புமா வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அதனை சாப்பிட்ட 16 மாணவ, மாணவிகள் திடீரென வாந்தி எடுத்து மயக்கம் அடைந்தனர். இதனையடுத்து, ஆசியர்கள் அவர்களை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்தனர்.மாணவ, மாணவிகள மயக்கம் அடைந்ததை அறிந்த பெற்றோர்கள் பள்ளியில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.