திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஐடிஐ மற்றும் துவாக்குடி அரசு கலைக்கல்லூரிக்கு அருகே செயல்படும் அரசு மதுபான கடைகளை மூட வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்வி நிலையங்களுக்கு அருகில் இயங்கி வரும் அரசு மதுபான கடையால் மாணவர்கள் மது பழக்கத்திற்கு அடிமையாகும் சூழ்நிலை உள்ளதாக கூறிய அவர்கள், அவற்றினை அரசு மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். திருச்சி, தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற போராட்டத்தில் மாணவர் ஒருவர் கழுத்தில் மாலை அணிந்து கொண்டு சாலையில் பிணம் போல் படுத்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.