துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி சென்னையில், 5 லட்சம் கைவிரல் ரேகை மூலம் அவரது உருவத்தை வரைந்து பள்ளி மாணவர்கள் உலக சாதனை படைத்துள்ளனர். சென்னை கொரட்டூரில் 5 ஆயிரம் சதுர அடியில் ரோலகஸ் பெயிண்ட் மூலம் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உருவத்தை வரைந்தனர். 6 மணி நேரம் வரையப்பட்ட இந்த ஓவியத்தை அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா ஆகியோர் பார்வையிட்டு மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினர். இந்த ஓவியம் யூனிக்கோ உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.