ராமநாதபுரம் மாவட்டம், பனையடியேந்தலில் உள்ள அரசு பள்ளி வகுப்பறை கட்டிடத்தின் மேற்கூரை காண்கிரிட் பெயர்ந்து அடிக்கடி விழுவதால் மாணவ, மாணவிகள் அச்சம் அடைந்தனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி, வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணாக்கர்களுக்கு ஆதரவாக பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.