கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி பாரதி விளையாட்டு அரங்கில் யோகா பயிற்சியின் போது வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட 30க்கும் மேற்பட்ட மாணவர்கள், வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். யோகா தினத்தை முன்னிட்டு 10-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். என்எல்சி நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்டு விட்டு மாணவர்கள் தங்களது பள்ளிகளுக்கு சென்ற நிலையில், ஜவகர் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு என்எல்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இதையும் படியுங்கள் : பள்ளி வகுப்பறையில் வீசிய துர்நாற்றம்... மாணவிகளுக்கு மூச்சு திணறல், குமட்டல்