திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அரசுப் பள்ளியில் வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி விழுந்ததாக கூறப்படும் நிலையில் மாணவர்கள் நான்கு பேர் மயக்கமடைந்தனர். கொளிஞ்சிவாடி பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு காங்கேயத்திலிருந்து காலை உணவு கொண்டு வரப்பட்டது. உணவை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே நான்கு மாணவர்கள் மயக்கமடைந்த நிலையில், மேலும் சிலர் வாந்தி, மயக்கம் உள்ளிட்ட அறிகுறிகளால் பாதிப்படைந்தனர். விசாரணையில் சாம்பாரில் பல்லி இருந்ததாகவும், அதனை அறியாமல் உணவு வழங்கப்பட்டதாகவும் கூறப்படும் நிலையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் அறிவித்தனர்.இதையும் படியுங்கள் : திமுக பிரமுகர் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் நடந்த கொடூரம்... சந்தேகத்தின் அடிப்படையில் மூவரை பிடித்து விசாரணை