ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே பள்ளிமாணவர்கள் ஆபத்தான முறையில் பரிசலில் ஆற்றை கடந்து செல்வதால் பாலம் அமைத்துத் தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அம்மாபாளையம் பகுதியில் உள்ள பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவர்கள், பெரியவர்கள் என அனைவரும் அப்பகுதியில் ஓடும் பவானி ஆற்றை கடந்து செல்ல வேண்டி உள்ளதாகவும், மழைக்காலங்களில் வெள்ளம் அதிகரித்து காணப்படுவதால் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை உள்ளதாகவும் கவலை தெரிவித்தனர். மேலும், உயர்மட்ட பாலம் அமைத்துத் தர வேண்டி பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டிய மக்கள் உடனடியாக பாலம் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.இதையும் படியுங்கள் : அரசு பேருந்து மீது மாருதி ஆம்னி வேன் மோதி விபத்து... ஆம்னி வேனை ஓட்டி வந்த பழ வியாபாரிக்கு நடந்த சோகம்