சென்னை கிண்டியில் மாநகர பேருந்தின் மேற்கூரை மீது ஏறி கல்லூரி மாணவர்கள் அராஜகம் செய்த வீடியோ வெளியாகியுள்ளது. தியாகராய நகரில் இருந்து குன்றத்தூர் வரை செல்லக்கூடிய 88 கே என்ற பேருந்தின் மேற்கூரையின் மீது கல்லூரி மாணவர்கள் சிலர் ஏறி பொதுமக்கள் அச்சுறுத்தும் வகையில் அராஜகத்தில் ஈடுபட்டனர். அரஜாகத்தில் ஈடுபட்ட மாணவர்கள் நந்தனம் கல்லூரியை சேர்ந்தவர்கள் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.