தேனி மாவட்டம் கொண்டமநாயக்கன்பட்டியில் உள்ள பேரூராட்சி குப்பை கிடங்கில் குப்பைகளை எரிப்பதால் ஏற்படும் புகை, அருகில் உள்ள அரசுப் பள்ளியை சூழ்ந்து மாணவர்களுக்கு சுவாசக் கோளாறு, மூச்சுத் திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளையும் புகை சூழ்ந்து, பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும் நிலையில், பள்ளி நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் சார்பாக கடந்த இரண்டு மாதங்களாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என கூறப்படுகிறது.