புதுக்கோட்டையில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளரின் அறிவுரையை ஏற்று கல்லூரி மாணவர் ஒருவர் தலைமுடியை சீராக திருத்தம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 21 ஆம் தேதி நடைபெற்ற போதை விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற எஸ்.ஐ.அழகர், கல்லூரி மாணவர்களுக்கு அறிவுரை தந்த நிலையில், மாணவன் ஆர்யா முடிதிருத்தம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்தார்.