தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே ஆதி திராவிடர் நல மாணவர் விடுதியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், விடுதி சுகாதாரமாக இல்லை என கூறி, பெண் வட்டாட்சியரிடம் கடிந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பொம்மிநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் நல மாணவ, மாணவியர்கள் விடுதியில், மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜித் சிங் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மாணவர்கள் வருகை பதிவேடு குறித்து முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்த விடுதி காப்பாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும், மாணவியர் விடுதியின் சமையல் அறை உள்ளிட்ட இடங்கள் சுத்தமாக இல்லாததை பார்த்து கோபம் அடைந்த ஆட்சியர், தனி வட்டாட்சியர் ராணியை பார்த்து நீங்கள் மட்டும் ராணி போல் இருந்தால் போதுமா? என கடிந்து கொண்டார்.