நாகப்பட்டினத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் தாய்க்கு பதிலாக தேர்வு எழுத வந்த மகளை தேர்வுத்துறை அதிகாரிகள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். நாகப்பட்டினம் நடராஜன் தமயந்தி பள்ளியில் ஆங்கில பாடத்திற்கான தனித் தேர்வு எழுத முககவசம் அணிந்து வந்த மாணவியை கண்டு சந்தேகம் அடைந்த தேர்வு அறை அதிகாரி, முககவசத்தை அகற்ற சொன்ன போது தாய் சுகந்திக்கு பதிலாக மகள் செல்வாம்பிகை தேர்வு எழுத வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 28 ஆம் தேதி நடந்த தமிழ் தேர்வையும் செல்வாம்பிகை ஆள்மாறாட்டம் செய்து எழுதியதாக கூறப்படுகிறது.