இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டில் நூற்றுக்கும் குறைவான மாணவர்களே சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கவுன்சிலிங் மூலம் தேர்வாகி வரும் மாணவர்கள், உரிய அடிப்படை வசதிகள் இல்லாததால் கல்லூரியில் சேர்வதில்லை என கூறப்படுகிறது. இதே நிலைமை நீடித்தால், கல்லூரியை மூடும் நிலை ஏற்பட்டுவிடும் என்பதால், விடுதி வசதி உள்ளிட்டவற்றை செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதையும் படியுங்கள் : சந்திரனும் செவ்வாய் கிரகமும் மிக அருகில் காட்சி அளிக்கும்..