திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே சுடுகாட்டுக்கு பாதையில்லை என கூறி, இறந்த பெண்ணின் சடலத்தை அடக்கம் செய்யாமல் அவரது வீட்டில் வைத்து இருளர் பழங்குடியின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேசூரில் இறந்த பெண்ணின் சடலத்துடன் தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.