காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் சாம்சங் தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. 17 தொழிலாளர்களின் சஸ்பெண்ட் உத்தரவை வாபஸ் பெறாவிட்டால், மார்ச் 8-ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள தொழிற்சாலைகளில் வேலை புறக்கணிப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாக, சிஐடியூ தொழிற்சங்க மாநில செயலாளர் முத்துகுமார் தெரிவித்தார்.