நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் புதிதாக திறக்கப்பட்ட மதுபான கூடத்தை மூடக்கோரி அனுமதி மீறி தவெக போராட்டம் நடத்திய நிலையில், மதுஅருந்திவிட்டு சாலையில் படுத்துக்கொண்டு நபர் அட்ராசிட்டியில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மதுபான கூடம் மருத்துவமனைகள், குடியிருப்புகளுக்கு மத்தியில் இருப்பதாகக் கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்த தவெகவினர் அனுமதி கேட்ட நிலையில் அனுமதி மறுக்கப்பட்டதால் அனுமதி மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில், நவீன மதுபானக் கடையில் மதுஅருந்திய ஒருவர் ஈரோடு-சேலம் மெயின் ரோட்டில் படுத்து அட்ராசிட்டியில் ஈடுபட்டார்.