தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இரண்டு மாதங்களாக குடிநீர் வழங்காத பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். புது சுப்புலாபுரம் கிராமத்தில் 2 மாதங்களுக்கு மேலாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வரை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், காலி குடங்களுடன் காரிச்சாத்தான் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.