ராமேஸ்வரத்தில் இலங்கைக்கு சீதையை மீட்க செல்லும்போது பயன்படுத்தப்பட்டது என கூறி மிதக்கும் கற்களை அப்புறப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். கோதண்டராமர் கோயில் அருகே மிதக்கும் கற்கள் எனக் கூறி சுற்றுலா பயணிகளிடம் சிலர் பணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார் எழுந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், அந்த வேலையை செய்து வந்த குடும்பத்தினர் கற்களை அகற்றக் கூடாது என போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போராட்டம் நடத்தியவர்கள் போலீசார் மீது மண்ணெண்ணெயை ஊற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.