புதுச்சேரி மண்ணாடி பட்டு தொகுதிக்கு உட்பட்ட சின்ன பேட் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் -ரேகா தம்பதிகளின் மூத்த மகன் த்ரிஷாந்த் இவர் திருக்கனூரில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.நேற்று பள்ளியில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு மாணவன் வீடு திரும்பி குளிப்பதற்காக ஹீட்டரில் தண்ணீர் சுட வைத்துள்ளார். அப்போது தண்ணீர் சுட்டு விட்டதா என்று கையை வைத்து பார்க்கும் போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதனை அடுத்து அவரை மீட்ட உறவினர்கள் மண்ணாடிப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தினர்.மேலும் மருத்துவமனையில் மருத்துவர் மற்றும் ஆம்புலன்ஸ் இல்லாததால் பணிபுரிந்த ஊழியர்கள் காரை வாடகை எடுத்து வந்து மாணவனை வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் வாடகை கார் மூலம் தனியார் மருத்துவமனையில் மாணவனை அனுமதித்தனர்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இன்று காலை திருக்கனூர் புதுச்சேரி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உறவினர்களின் மறியல் போராட்டத்தால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினார். இதனை ஏற்க மறுத்த உறவினர்கள் அமைச்சரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நமச்சிவாயம் உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனைத்தொடர்ந்து மருத்துவமனைக்கு ஆய்வுக்கு சென்ற அமைச்சர் நமச்சிவாயம் பணியில் இருந்த மருத்துவர்கள் கடுமையாக கடிந்துக் கொண்டார். குளிக்கும் போது தண்ணீர் சுட வைத்த மாணவனை மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. Related Link இலங்கையில் வரும் 7ஆம் தேதி டி20 உலகக்கோப்பை தொடர்