டிரான்சிட் பாஸ் வழங்காத கிரஷர் உரிமையாளர்களை கண்டித்தும் கும்பகோணம் ஒருங்கிணைந்த லாரி மற்றும் டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பினர் கும்பகோணம் சென்னை புறவழிச்சாலையில் லாரிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.டிரான்சிட் பாஸ் இல்லாத லாரிகள் பிடிப்படும் போது ஓட்டுநர் மற்றும் லாரி உரிமையாளர்கள் 25 நாட்கள் சிறை தண்டனை பெறுவதாகவும், லாரியை வெளியே கொண்டு வர ஒரு வருடம் ஆவதால், பெரும் இழப்பு ஏற்படுவதாக கூறி அவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டனர். 70 க்கும் மேற்பட் லாரிகள் கும்பகோணம் சென்னை புறவழிச்சாலையில் நிறுத்தப்பட்டள்ள நிலையில் அங்கு கட்டுமான பொருட்களுக்கு தட்டுபாடு ஏற்படும் சுழல் ஏற்பட்டுள்ளது.