அரசால் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலையை மீன்வர்கள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மயிலாடுதுறை ஆட்சியர் மகாபாரதி எச்சரித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுருக்குமடி வலையை பயன்படுத்தினால் மீனவர்களுக்கு வழங்க கூடிய அரசு நலத்திட்ட உதவிகள் ரத்து செய்யப்பட்டு, அவர்களின் படகு மற்றும் வலைகள் பறிமுதல் செய்யப்படும் என்றார்.