ராமதாஸ் அன்புமணி இடையேயான மோதல் நாளுக்கு நாள் வலுத்து வரும் நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் வன்னியர் சங்கத்தின் மகளிர் மாநாடு இன்று நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான பெண்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.