சுற்றித் திரியும் தெரு நாய்களால், கிராம மக்கள் அச்சத்தில் உறைந்து உள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா மேலவழுத்தூர் ஊராட்சியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.இந்நிலையில், கிராமங்களை சுற்றிலும் தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக வந்த வண்ணம் இருக்கிறது. இதனால், பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள், பொது மக்கள், இரண்டு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் அச்சத்துடனேயே பயணிக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. இதுபோன்ற அச்சத்தில் இருந்து கிராம பொது மக்களை பாதுகாக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுற்றித் திரியும் தெரு நாய்களை உடனடியாக பிடித்து, ரேபிஸ் ஆபத்திலிருந்து காப்பாற்ற வேண்டும் என்பது இந்தப் பகுதி கிராம பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.