சுற்றுலா தலமான கொடைக்கானலில் கடந்த 5 நாட்களில் மட்டும் 8க்கும் மேற்பட்டோரை தெருநாய்கள் கடித்த நிலையில், நாய்கள் கடித்து குதறியதில் பலத்த காயமடைந்த ஒடிசா மாநில சுற்றுலாப் பயணி ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செட்டியார் பூங்கா பகுதியில் அதிகளவில் நாய்கள் சுற்றுவதாக கூறப்படும் நிலையில், அதிகாலை நேரத்தில் அங்கு நடைபயிற்சி செய்பவர்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.இதையும் படியுங்கள் : திருவாரூர் மாவட்டத்தில் உரத் தட்டுப்பாடு என தகவல் உரிய நடவடிக்கை எடுக்கும்படி விவசாயிகள் கோரிக்கை