சென்னை மாநகராட்சியில் மெட்ரோ பணிகளால் சிதிலமடைந்த மழை நீர் கால்வாய்களை இம்மாத இறுதிக்குள் சீரமைக்க மெட்ரோ நிர்வாகம் உறுதியளித்ததாக மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற மாநகராட்சி பணியாளர்களுக்கான முழு உடல் பரிசோதனை முகாமை மேயர் பிரியா தொடங்கி வைத்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநகராட்சி பகுதிகளில் மழை நீர் வடிகால் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக கூறினார்.