குமரி மாவட்டத்தில் நடைபெறும் கனிமவளக் கொள்ளையை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.குமரி மாவட்டத்தில் கனிமவளக் கொள்ளை கட்டுப்பாடின்றி தொடர்ந்து வருவதாகவும் இயற்கை நலனிலும், மக்கள் நலனிலும் சிறிதும் அக்கறை இல்லாமல், பேரிடரை விலை கொடுத்து வாங்கும் அத்துமீறல்களுக்கு தமிழ்நாடு அரசு மறைமுகமாக துணை போவதாக கண்டனம் அவர் தெரிவித்துள்ளார்.கஸ்தூரிரங்கன் பரிந்துரைப்படி மேற்குத் தொடர்ச்சி மலையின் பாதுக்காக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்களில், கனிமவளங்களை வெட்டி எடுக்க வழங்கப்பட்ட உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும், குமரி மாவட்டத்தின் இயற்கை அழகை போற்றிப் பாதுகாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.