ராசிபுரம் அடுத்த பட்டணம் சாலையில் மது போதையில் கற்களை வீசி தாக்கிக் கொண்ட போதை கும்பல் அச்சத்துடனே பொதுமக்கள் சாலையை கடந்து சென்ற சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது. ஒரே இடத்தில் இரண்டு டாஸ்மாக்ராசிபுரம் போக்குவரத்து நிறைந்த பிரதான சாலையான பெரியசாமி கடை அருகிலேயே சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. மேலும் அப்பகுதி இரண்டு தனியார் மருத்துவமனைகளும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் குடியிருப்புகள் சூழ்ந்த பகுதியில் பட்டணம் சாலையில் ஒரே இடத்தில் இரண்டு மதுபான கடையில் செயல்பட்டு வருகிறது. சாலைகளிலே மது அருந்தும் மதுபோதை ஆசாமிகள்இந்த இரண்டு மதுபான கடைகளுக்கு பார் வசதி இல்லாததால் கடையின் முன்பு சாலைகளிலேயே மது அருந்தி வருகின்றனர். போதை தலைக்கு ஏறியதும் போதை ஆசாமிகள் ஆபாச வார்த்தைகள் மற்றும் தகராறுகளில் ஈடுபடுவதால் இப்பகுதி பொதுமக்கள் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவியர்கள் மாலை நேரங்களில் சாலையை கடக்க ஒருவித அச்சத்துடனே செல்கின்றனர். நாளுக்கு நாள் அதிகரிக்கும் அட்டூழியம்இந்த குடியிருப்பு பகுதியில் உள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக மனு அளித்தும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக போதை ஆசாமிகளின் அட்டூழியம் நாளுக்கு நாள் தொடர்ந்து வருகிறது.ஐந்து பேர் கொண்ட மதுபோதை கும்பல் அட்ராசிட்டிஇந்த நிலையில் கடந்த இரண்டு தலைகளும் முன்பு ஐந்து பேர் கொண்ட கும்பல் போதை தலைக்கு ஏறியதும் கற்களை எடுத்து ஒருவருக்கு ஒருவரை தாக்கிக் கொண்டு பொதுமக்கள் மீதும் வீசி உள்ளனர். பின்னர் அங்கு இருந்தவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் போதை ஆசாமிகளை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். தற்போது இந்த போதை கும்பல் கற்களை எடுத்து வீசி தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. Related Link பள்ளி பேருந்து மீது மோதிய டிப்பர் லாரி