கன்னியாகுமரி அதிவிரைவு ரயிலின் முதல் வகுப்பு பெட்டியில் துர்நாற்றம் வீசுவதாக கூறி, அதிகாரிகளிடம் பயணிகள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட அதிவிரைவு ரயிலின் முதல் வகுப்பு பெட்டியில் துர்நாற்றம் வீசியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், நெல்லை சென்றடைந்தபோது அந்த பெட்டியில் ஏறிய பயணி ஒருவர், ரயிலின் அபாய சங்கிலி பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அதிகாரிகளிடம் பயணிகள் வாக்குவாதம் செய்த நிலையில், மதுரையில் பெட்டி மாற்றப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து 40 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டது.