செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே குடுகுடுப்பைக்காரன் போல் வேடமணிந்து வீட்டில் தனியாக இருந்த பெண் மீது மயக்க ஸ்பிரே அடித்து 4 சவரன் தங்க நகை மற்றும் 400 கிராம் வெள்ளி நகைகளை கொள்ளையடித்த மர்மநபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர் கைவரிசையை காட்டியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.