கொடைக்கானலின் முக்கிய நகர் பகுதியில் உள்ள அன்னை காமாட்சி நகைக்கடையில், நகை வாங்குவது போல் நடித்து ஒன்றரை சவரன் தங்க செயினை மர்ம நபர் திருடி சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.இது குறித்து உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.