ராணிப்பேட்டை மாவட்டம் அம்மனூர் பகுதியில் உள்ள கிறிஸ்துவ வழிபாட்டு தளத்தில் இருந்து டிவி மற்றும் ஒலிவாங்கியை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.வழிபாட்டுத்தளத்தை திறக்க வந்த ஊழியர் தாமஸ் ராஜ் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து ரூபாய் 45 ஆயிரம் மதிப்புள்ள ஒலிவாங்கி, LED டிவி திருடப்பட்டது குறித்து நகர காவல் நிலையத்திற்கு தகவல் அளித்த நிலையில் , வழிபாட்டு தளத்தின் சிசிடிவி காட்சிகளை கொண்டு வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.