நாகையில் நடைபெற்ற கபடி போட்டியில் தஞ்சை அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற சென்னை அணி தேசிய கபடி போட்டிக்கு தகுதி பெற்றது. தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் சார்பில், நாகையில் நடைபெற்ற மாநில அளவிலான 34-வது சப் ஜூனியர் சாம்பியன்ஷிப் கபடி போட்டியில், 38 மாவட்டங்களை சேர்ந்த 456 வீரர்கள் பங்கேற்று விளையாடினர். இறுதிப்போட்டியில் 33-க்கு 32 என்கிற புள்ளிக் கணக்கில் தஞ்சை அணியை வீழ்த்தி சென்னை அணி வெற்றிபெற்றது. இதன் மூலம், பிப்ரவரி 27-ம் தேதி ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் தேசிய அளவிலான கபடி போட்டியில் தமிழக அணி சார்பில் விளையாட சென்னை அணி தகுதி பெற்றது.