நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே நடைபெற்று வரும் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் 36 கல்லூரிகள் கலந்து கொண்டன. மெட்டாலா லயோலா கல்லூரியில் கடந்த 3 தினங்களாக நடைபெற்று வரும் விக்டர்ஸ் டிராபிக்கான மாநில அளவிலான போட்டியில் சென்னை லயோலா கல்லூரி, மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி, கோவை பி.எஸ்.ஜி. கல்லூரி, JIT சென்னை கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகள் பங்கேற்றுள்ளன. நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் சுழற்கோப்பையும், சான்றிதழும் வழங்கப்படும்.