தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்று வரும் மாநில ஹாக்கி போட்டியில் சென்னை, பாண்டிச்சேரி , மன்னார்குடி, திண்டுக்கல், கோவில்பட்டி, ராஜபாளையம் உள்ளிட்ட 8 அணிகள் கால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. தூத்துக்குடி மாவட்ட ஹாக்கி கழக முன்னாள் தலைவர் யு. அய்யாச்சாமி 19வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி மாநில அளவிலான ஹாக்கி போட்டிகள் நடைபெற்று வருகிறது.