கரூரில், தவெக கூட்ட நெரிசலில் சிக்கி, காயமடைந்தவர்களுக்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியை நேரில் வழங்கி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆறுதல் தெரிவித்தார். கரூரில் நடந்த துயர சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் 45 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சத்திற்கான காசோலைகளை கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி நேரில் வழங்கினார். கரூரில் கடந்த மாதம் 27ஆம் தேதி, தவெக சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டத்தில், நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்நிலையில், தமிழக முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண உதவியும், காயம் அடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை வழங்கவும் உத்தரவிட்டார். இன்று, காயம் அடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் காசோலையை 45 நபர்களுக்கு நிவாரண உதவிகளை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர், பாதிக்கப்பட்டவரின் இல்லத்திற்கு நேரில் சென்று நலம் விசாரித்து, வழங்கினர்.